வெடிகுண்டு வெடித்ததில் இருவர் படுகாயம்
கிளிநொச்சி பகுதியிலுள்ள பாழடைந்த வீடொன்றுக்குள் வெடிகுண்டு வெடித்ததில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சியின் தக்கன் கோட்டே பகுதியில் நேற்று (29) இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் பலத்த காயமடைந்தவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.