யாழில் மே தினப் பேரணி


தொழிற்சங்கங்கள், வெகுஜன மற்றும் சிவில் அமைப்புகளுடன் இலங்கை ஆசிரியர் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த கூட்டு மே தினப் பேரணி ஊர்வலம் இன்று (01) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

இன்று முற்பகல் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பமான இந்த பேரணி நகர்ப் பகுதி ஊடாக சென்று, யாழ்.பொது நூலகத்துக்கு முன்பாக நிறைவுபெற்றது.

இந்த பேரணியில் ஈடுபட்டவர்கள் “தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரி!”, “அதிபர், ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர்களின் சம்பள முரண்பாட்டை உடனடியாக நீக்கு!”, “மலையகத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை வழங்கு!”, “கடற்றொழிலாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கு!”, “விவசாயிகள் எதிர்நோக்கும் உற்பத்தி”, “சந்தைப்படுத்தல் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கு!”முதலான சில கோரிக்கைகளை முன்வைத்தனர்.


Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *