கேரள கஞ்சாவுடன் இருவர் கைது
கிளிநொச்சி தலைமையகப் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, 400 கிலோகிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற லொறியுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் கண்டி-யாழ்ப்பாணம் A-9 வீதியில் உள்ள பரந்தன் பகுதியில் 209 ஆவது கிலோமீட்டர் தூணுக்கு அருகில் லொறியொன்றினை சோதனை செய்தபோதே இந்த கேரள கஞ்சா கையிருப்புடன் சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.