நடுவீதியில் மோட்டார் சைக்கிள் தீக்கிரை
வவுனியாவில் ஏ9 வீதியில் பயணித்த மோட்டர் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவமொன்று வியாழக்கிழமை (06) இரவு பதிவாகியுள்ளது.

வவுனியா நகரிலிருந்து சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்று வவுனியா மகாவித்தியாலயத்தை அண்மித்து நிறுத்திவிட்டு, மீண்டும் புறப்பட தயாரான போது திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
மோட்டர் சைக்கிள் ஒட்டுனர் மற்றும் வீதியில் சென்றவர்கள் தீயை கட்டுப்படுத்த முயன்ற போதும் மோட்டர் சைக்கிள் பகுதியளவில் எரிந்து சேதமாகியுள்ளது பின்னரே தீ அணைத்துள்ளார்கள்.
