மின்சாரம் தாக்கி சிறுமி பலி
வவுனியா, பாழையவாடி பகுதியில் வெள்ளிக்கிழமை (7) மின்சாரம் தாக்கி 7 வயது சிறுமியொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி தவறுதலாக நீர் இறைக்கும் மோட்டாரின் மேல் விழுந்துள்ளார். அப்போது அதில் பொருத்தப்பட்டிருந்த மின்கம்பியின் மூலம் மின்சாரம் தாக்கியதில் குறித்த சிறுமி இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சடலம் வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், புளியங்குளம் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.