உள்நாட்டு துப்பாக்கிகள் மற்றும் கஞ்சா போதைப் பொருளுடன் ஐவர் கைது

உள்நாட்டு துப்பாக்கிகள் மற்றும் கஞ்சா போதைப் பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த ஒருவரிடம் இருந்து 2 கிராம் கஞ்சா மற்றும் இரண்டு மான் கொம்புகளும் மீட்கப்பட்டன.
இதனையடுத்து, அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சட்டில் அப் பகுதியைச் சேர்ந்த 32 மற்றும் 27 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன், நீதிமன்றினால் இரண்டு பிடிவிறாந்து விதிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
குறித்த மூவரும் வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டு உளுக்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேலதிக விசாரணைகளின் பின் உளுக்குளம் மற்றும் வவுனியா பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.