அநுராதபுரத்தில் விபத்து ; ஒருவர் பலி
அநுராதபுரத்தில் கெப்பித்திகொல்லேவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹநெட்டியாவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக கெப்பித்திகொல்லேவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (17) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கெப்பித்திகொல்லேவ நோக்கிப் பயணித்த கெப் வாகனம் ஒன்று காருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது காரின் சாரதியும் அதில் பயணித்த இருவரும் கெப் வாகனத்தின் சாரதியும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கார் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் எடவீரகொல்லேவ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கெப்பித்திகொல்லேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
