போதை மாத்திரைகளுடன் மூவர் கைது
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் போதை மாத்திரைகளுடன் மூவர் இன்று திங்கட்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளனர்.
17 தொடக்கம் 18 வயதுடைய மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 20 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண பொலிஸ் போதை தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தேவையான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
