கேரள கஞ்சாவுடன் இருவர் கைது
யாழில் 78 மில்லியன் ரூபாவுக்கும் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் அனலைத்தீவுக்கு அப்பால் உள்ள வடக்கு கடலில் இன்று (03) காலை மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது இந்த கேரள கஞ்சா மீட்ப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 197 கிலோகிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற டிங்கி படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் கேரள கஞ்சாவும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் காரைநகர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட உள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.