தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல்…

நல்லூரில் எழுச்சியாக ஆரம்பமான தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல்!
தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியாக யாழில் இன்று (15) ஆரம்பமாகியது.

தமிழ் மக்களின் உரிமைக்காக 12 நாட்கள் உணவையும் நீரையும் ஒறுத்து உயிர்த் தியாகம் செய்த தியாகதீபம் திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நல்லூரில் நடைபெற்றது.

நல்லூர் கந்தன் ஆலயம் அருகே அவர் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் அஞ்சலி நடைபெற்று, தொடர்ந்து, நல்லூரான் பின் வீதியில் அமைந்துள்ள திலீபன் நினைவிடத்தில் நினைவேந்தல் இடம்பெற்றது.

இதன்போது பொதுச் சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இவ் நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் போராளிகள் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.