யாழில் கத்திக்குத்து ; ஒருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் நேற்று (10) இரவு இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த அற்புதராசா அகிலன் எனும் 40 வயதானவர் உயிரிழந்துள்ளதோடு, நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த நபர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபரை பிடிக்க முயன்றவர்கள் மீதும் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுவிட்டு அந் நபர் தப்பிச் சென்றுள்ளார்.
காயமடைந்த நால்வரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
