சிலுவையிலிருந்து வடியும் நீர் – மக்கள் ஆச்சரியம்
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் உள்ள ஆண்டவர் சிலுவையின் விரல் பகுதியில் இருந்து இன்று (28) நீர் கசிந்ததன் மூலம் அப்பகுதியில் மக்கள் பெரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

இந்த விசித்திரமான நிகழ்வு மூன்று மணி நேரத்திற்கு மேலாக நீடித்ததாக தகவல் கிடைத்துள்ளது. அப்பகுதியில் நடந்த சம்பவத்தை அறிந்து பல்வேறு இடங்களில் இருந்து வந்த மக்கள், ஆண்டவர் சிலுவையின் காலில் இருந்து வடிந்த நீரை திரட்டிச் சென்றனர்.

சகோதர மதத்தினர், இராணுவத்தினர், பொலிசார், மற்றும் பொது மக்கள் என பலர் அங்கு கூடியதோடு, இந்த நிகழ்வின் புகைப்படங்களையும் எடுத்துச் சென்றனர்.
சம்பவம் தொடர்பாக ஆலய நிர்வாகத்தினர், குறிப்பாக கப்பலேந்தி மாதா ஆலய பங்குத்தந்தையின் உறுதிப்பாட்டுக்குப் பிறகே மேலும் தகவல் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர்.
