செம்மணி மனித புதைகுழி தொடர்பாக வெளியான தகவல்


செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் அடுத்த வருடம் முன்னெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்வதற்காக யாழ். நீதவான் நீதமன்ற நீதவான், சட்டவைத்திய அதிகாரி, சட்டத்தரணிகள் அடங்கிய குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதன்போது புதைகுழிக்குள் மழைநீர் தேங்கி நிற்பதனால் அடுத்த அகழ்வு பணிகளை மேற்கொள்வது தொடர்பில் எதிர்வரும் ஜனவரி மாதம் 19 ஆம் திகதி மீண்டும் அகழாய்வு தளத்திற்கு விஜயம் மேற்கொண்டு, அடுத்த கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராயப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின்போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *