தையிட்டியில் போராட்டம்
தையிட்டி பகுதியில் உள்ள விகாரையின் சுற்றுவட்டாரத்தில் பொதுமக்கள் காணிக்குள் அத்துமீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்ற வேண்டுமென வலியுறுத்தி இன்று (12) பிற்பகல் முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் மற்றும் கோயில் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து மேற்கொண்டுள்ள இந்த போராட்டத்தில்இ அவ்விடத்திலுள்ள கோயில் காணிகளை விடுவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் “நமது பாரம்பரியக் காணியை மீட்க வேண்டும்” என முழங்கியதுடன்இ அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த நிலையில்இ சம்பவ இடத்திற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன்இ உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் மற்றும் சமாதான பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும்இ இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் விரைவில் தீர்வு காணுமா என எதிர்பார்க்கப்படுகிறது.