நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு


வவுனியா, மயிலங்குளம் குளத்தில் நீராடச் சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக வவுனியா – மாமடுப் பொலிஸார் இன்று (19) தெரிவித்தனர்.

வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 4 மாணவர்கள் மயிலங்குளம் குளத்திற்கு நேற்று (18) மாலை நீராடச் சென்றுள்ளனர். இதன்போது குறித்த மாணவர்கள் குளத்தில் நீராடிக் கொண்டிருந்த போது ஒரு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மாமடுப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *