பாேதை பாெருளுடன் இளைஞர் கைது


வவுனியாவில் போதை மாத்திரைகள் மற்றும் ஹெராேயின் பாேதை பாெருளுடன் இளைஞர் ஒருவர் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விஜய சோமமுனி அவர்களின் அறிவுறுத்தலின் கீழ் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக அவர்களின் தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ஸ, பொலிஸ் சார்ஜன் பண்டார மற்றும் பொலிஸ் கொன்ஸ்தாபில்களான பியரட்ண, சேனநாயக்க, குமாார சிஙக, குமார பொலிஸ் சாரதி சரித் உள்ளடங்கிய பொலிஸ் குழுவினர் தேக்கவத்தை பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1,000 போதை மாத்திரைகள் மற்றும் 2,200 மில்லிகிராம் ஹெராேயின் மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

முதற்கட்ட விசாரணைகளில் குறித்த போதை மாத்திரைகள் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.


Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *