நல்லூர் செல்வோர் கவனத்திற்கு!
நல்லூர் (Nallur) திருவிழாவில் நகைகளை திருடும் நோக்கில் இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளமையால், ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அவதானமாக இருக்குமாறு யாழ். பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆலய சூழலில் திருடர்களின் நடமாட்டம் காணப்படுவதால் பொலிஸார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
