ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
சுன்னாகம், புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இன்று (27) அதிகாலை ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடமிருந்து 2 ஆயிரத்து 400 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்.பொலிஸ் புலனாய்வுப் பிரிவிருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
