ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது
யாழ்ப்பாணம், பொம்மைவெளி பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் போதை தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையிலேயே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் சுமார் 15 இற்கும் அதிகமான போதை மாத்திரைகள் மற்றும் 50 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.
18,19,21 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவார்.
குறித்த சந்தேக நபர்களை இன்று (16) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.