ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச சபை வேட்பாளர்களுடனான சந்திப்பு


ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேலணை பிரதேச சபை வேட்பாளர்களுடனான சந்திப்பும் அறிமுக கூட்டமும் இன்றையதினம் (29) கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

வேலணையிலுள்ள கட்சியின் பிரதேச அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் 2025 ஆம் ஆண்டு பிரதேச சபை தேர்தலில் போடியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சி செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது கட்சி கட்டமைப்புக்களை மேலும் வலுப்படுத்தி, மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையிலான வேலைத் திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுப்பது, தேர்தலில் பிரசார நடவடிக்கையின் போது முன்னெடுக்கப்படவுள்ளநடைமுறைச் சாத்தியமான பொறிமுறைகள் குறித்தும் வேட்பாளர்களுக்கு செயலாளர் நாயகம் தெளிவுபடுத்தியிருந்தார்.

ஒரு பிரதேச மக்களின் மீட்சியும் அவர்களின் பிரதிபலிப்புகளும் அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளே அதிகம் நிர்ணயிக்கின்றன. இதை கடந்த காலத்தில் நாம் செயற்படுத்தி காட்டியுள்ளோம்.அது இம்முறையும் தொடர மக்கள் சந்தர்ப்பத்தை வழங்க நம்பிக்கையுடன் செயற்படுங்கள் என்றும் டக்ளஸ் தேவானந்தா இங்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *