கிருசாந்தி படுகொலையின் 29 ஆவது ஆண்டு நினைவேந்தல்
கிருசாந்தி படுகொலையின் 29 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் நல்லூர் செம்மணி பகுதியில் இன்று (07) இடம்பெற்றது.
இந்த நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூர் செம்மணி பகுதியில் இடம் பெற்றது.
கிருஷாந்தி எனும் மாணவி 1996 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 07 ஆம் திகதி இராணுவத்தால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.