வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம்


வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று காலை (24) காலை 9 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.

இக்கூட்டமானது பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக்குழு தலைவருமான இளங்குமரன் தலைமையில் நடைபெற்ற நிலையில் பிரதேச அபிவிருத்தி சார்ந்த பல விடயங்கள் மக்களால் முன்வைக்கப்பட்டன.

அபிவிருத்திக்குழு கூட்டத்தில் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், வடமராட்சி கிழக்கு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *