வவுனியாவில் போதை மாத்திரையுடன் இளைஞர் கைது
வவுனியா – பெரியார்குளம் பகுதியில் போதை மாத்திரைகளை உடமையில் வைத்திருந்த இளைஞர் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸ் அதிகாரி அழகியவண்ண தலைமையிலான குழு பெரியார்குளம் பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்த சோதனையின் போது, 27 வயதுடைய இளைஞர் ஒருவரிடம் இருந்து 50 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன. உடனடியாக, குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் வவுனியா பெரியார்குளம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், அவரிடம் மேலதிக விசாரணைகள் நடந்து வருவதாகவும், பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்படும் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.