யாழில் ஹெரோயினுடன் இளைஞர் கைது
15 கிராம் ஹெரோயின் மற்றும் 2 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் சுன்னாகம் பகுதியில் வைத்து இளைஞர் ஒருவர் நேற்று (30) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ராமநாயக்க மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி கெலும் ஆகியோரின் வழிப்படுத்தலுக்கு அமைவாக வீடொன்று முற்றுகையிடப்பட்டு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
