பட்டாசு கொலுத்திய இளைஞர் கைது

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் தியாக தீபம்திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவு தினம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனடிப்படையில், தியாக தீபம் தீலீபனிம் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி பருத்தித்துறை நகர் மக்களின் அஞ்சலிக்காக இன்றையதினம் (23) வருகை தந்திருந்தது.
இதன் போது, பருத்தித்துறை நகரபகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரால் ஊர்தியின் முன் பகுதியில் பெருந்தொகையான பட்டாசுகளை கொலுத்திய போது பருத்தித்துறை நகர் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது
அதனை தொடர்ந்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞனை பருத்தித்துறை நகர சபை தவிசாளரின் வேண்டுகோளுக்கு இணங்க பருத்தித்துறை பொலிஸார் குறித்த இளைஞனை கைது செய்துள்ளனர்.
