நாயைக் கொடூரமாகக் கொன்ற பெண் கைது
முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் நாயின் கழுத்தை நெரித்து தூக்கிலிட்ட சம்பவம் தொடர்பாக 48 வயதுடைய பெண் ஒருவர் கைது இன்று செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க அளித்த தகவலின்படி, குறித்த நாயின் கழுத்தில் கயிறு கட்டி கொடூரமாக கொல்லப்பட்டதின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து, பலரும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்த மாங்குளம் பொலிஸார், சந்தேகநபரைக் கைது செய்ததுடன், விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை முன்வைத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
இதேவேளை, ஒட்டுசுட்டான் மத்தியஸ்தக் குழுவின் முடிவினால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும், இது மனிதாபிமானமற்ற செயல் எனவும் சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.