யாழில் “தெங்கு செய்கை வாரம்”


தென்னை செய்கையை சேதப்படுத்தும் வெள்ளை ஈக்கள் உள்ளிட்ட பூச்சிகளை எதிர்த்துப் போராடுவதற்காக தென்னை அபிவிருத்தி சபை “தெங்கு செய்கை வாரம்” என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

யாழ்ப்பாணப் பகுதியை மையமாகக் கொண்டு, இந்தத் திட்டத்தின் முதல் கட்டம் அடுத்த மாதம் 14 ஆம் தினதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தென்னை அபிவிருத்தி சபையின் தலைவர் டாக்டர் சுனிமல் ஜெயக்கொடி தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்

“அனைத்து மாவட்டங்களிலும் தெங்கு செய்கை வாரம்”திட்டத்தை அறிவித்து உடனடி நடவடிக்கையாக அதை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். அதன்படி, ஜூலை 14 ஆம் திகதி இது செயல்படுத்தப்படும்.

வெள்ளை ஈக்கு தீர்வாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து தென்னை மரங்களும் தண்ணீர் தெளிக்கப்பட்டு கழுவப்படும். இது ஒரு பெரிய வேலை. ஆனால் இப்போது அதற்குத் தேவையான மனிதவளத்தையும் இயந்திரங்களையும் நாங்கள் தயார் செய்து வருகிறோம்.”


Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *