52 கிராம் கஞ்சாவுடன் இருவர் கைது
யாழ்ப்பாணம் – தட்டாதெரு சந்தியில் வைத்து இன்று (18) இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்களிடமிருந்து 52 கிராம் கஞ்சா மீட்கப்பட்டது.
யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
