10 இலட்சம் மதிப்பிலான உலர்ந்த இஞ்சி கைப்பற்று


இராமநாதபுரம் ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு வியாழக்கிழமை (13) அதிகாலை திருப்புல்லாணி அருகே தோப்புவலசை கடற்கரையில் இருந்து படகு மூலம் உலர்ந்த இஞ்சி (சுக்கு) இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக இரகசிய தகவல் கிடைத்தது.

அடிப்படையில் ஒருங்கிணைத்த குற்ற தடுப்பு பிரிவு பொலிஸார் சேதுகரையிலிருந்து தோப்புவலசை வரை கடற்கரை ஓரம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தோப்புவலசை கடற்கரை பகுதியில் 50 மூட்டைகளில் சுமார் இரண்டு டன் எடை கொண்ட உலர்ந்த இஞ்சி மூட்டைகள் படகில் ஏற்றுவதற்காக கடற்கரையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து உலர்ந்த இஞ்சி மூட்டைகளை பறிமுதல் செய்த பொலிஸார் அதனை திருப்புல்லாணி காவல் நிலையத்தில் ஒப்படைத்து பின்னர் ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட உலர்ந்த இஞ்சியின் மதிப்பு இந்திய மதிப்பில் 10 இலட்சம் இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *