செம்மணி மனித புதைகுழியில் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்
செம்மணி மனித புதைகுழியில் இன்று (27) மேலும் இரண்டு மனித எலும்புக்கூடுகளும் சில எலும்பு சிதிலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் இன்று முன்னெடுக்கப்பட்டது.
நேற்றைய முன்தினம் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கு 45 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில்இ முதல் கட்டமாக 15 நாட்கள் தொடர்ச்சியாக பணிகள் நடைபெறும். பின்னர்இ சிறு கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பணிகள் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
