யாழில் கஞ்சாவுடன் இருவர் கைது


யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலணி மற்றும் மல்லாகம் பகுதிகளைச் சேர்ந்த இருவர் நேற்று (05) இரவு இணுவில் தியேட்டரடியில் 9 கிலோ 794 கிராம் கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டனர்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், சந்தேகநபர்களிடமிருந்து கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டன.

கைதுசெய்யப்பட்டவர்கள் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *