நெளுக்குளம் முருகன் ஆலயத்தில் புதிர் எடுக்கும் நிகழ்வு
வவுனியா நெளுக்குளம் முருகன் ஆலயத்தில் பாரம்பரிய முறையில் புதிர் எடுக்கும் நிகழ்வு

வவுனியா நெளுக்குளம் முருகன் ஆலயத்தில் தைப்பூச நாளான இன்று புதிர் எடுக்கும் நிகழ்வு பாரம்பரிய முறையில் இடம் பெற்றிருந்தது.

நெளுக்குளம் வயல்வெளியில் புதிரெடுத்து மாட்டு வண்டிலில் அவற்றை ஏற்றி மேளதாளம் முழங்க ஆலயத்திற்கு புதிர் கொண்டுவரப்பட்டு அவை உரலில் இடித்து அரிசியாக்கப்பட்டு புதிய பானையில் பொங்கலும் இடம் பெற்று இருந்தது.

பாரம்பரிய முறையில் இடம் பெற்ற புதிர் எடுக்கும் நிகழ்வைபலரும் கண்டு ரசித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
