யாழில் செயல்படாத பொருளாதார மையத்தை பார்வையிட்டார் – வசந்த சமரசிங்க


யாழ். மட்டுவில் பகுதியில் அமைக்கப்பட்டு இயங்காது உள்ள பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (12) நேரில் சென்று பார்வையிட்டார்.

மட்டுவில் பிரதேசத்தில் 2022 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 20 திகதி அன்று அன்றைய பிரதமர் மகிந்தராஜபக்ச அவர்களினால் திறத்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் எந்த வொரு வர்த்தக செயற்பாடும் இடம்பெறவில்லை.

இந்த நிலையில் குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க நேரில் சென்று பார்வையிட்டதுடன் இயங்கச் செய்வதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இவ் விஜயத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் க,இளங்குமரன், தென்மராட்சி பிரதேச செயலாளர், உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இவ் விஜயத்தை தொடர்ந்து யாழ் மாவட்ட செயலகத்தில் பொருளாதார மத்திய நிலையம் தொடர்பாகவும், கூட்டுறவு வங்கி தொடர்பாகவும் அமைச்சர் தலைமையில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.


Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *