A9 வீதியில் விபத்து – மூவர் படுகாயம்
A9 வீதியில் மிஹிந்தலை,பலுகஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கதிர்காமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்துடன் அதற்கு பின்னால் வந்த லொறியொன்று மோதியதில் இவ் விபத்து நேர்ந்துள்ளது.
இவ் விபத்தில் பேருந்தில் பயணித்த மூன்று பயணிகள் காயமடைந்ததில் மிஹிந்தலை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மிஹிந்தலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.