பழக்கடை சிறுவனிடம் வரி அறவீட்டு உத்தியோகத்தர்கள் அடாவடி
யாழில் வீதியோரத்தில் பழக்கடை நடத்தி வந்த சிறுவனிடம் யாழ். மாநகர சபை வரி அறவீட்டு உத்தியோகத்தர்கள் அடாவடியில் ஈடுபட்டு, சிறுவனின் வியாபாரத்தை இடை நிறுத்தியுள்ளனர்.
வீதியோரமாக இந்த வியாபார நடவடிக்கை மேற்கொண்டமையினாலேயே இதை அகற்ற நடவடிக்கை எடுத்ததாக மாநகர சபை உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், குறித்த சிறுவனிடம் இலஞ்சமாக தினமும் பழங்களும் வாங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது.