மாவை சேனாதிராசாவின் பூதவுடலுக்கு அஞ்சலி
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடல், யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை(30), இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கொடியை போர்க்கப்பட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதற்கு பாராளுமன்ற குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன், முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

மத தலைவர்கள், கட்சியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்கள் இன்று பிற்பகலில் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.