யாழ். மருதங்கேணியில் கொலை : சந்தேக நபர் கைது


யாழ். வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி தவனேசன் என்பவர் உயிரிழந்த சம்பவத்ததுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நேற்றிரவு மருதங்கேணி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் மருதங்கேணி வீரபத்திரர் கோவிலை அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும், கத்திக்குத்துக்கு இலக்கானவர் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரின் கணவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கொலை செய்யப்பட்டவர் மருதங்கேணி பகுதிக்கு சென்றுகொண்டிருக்கும்போது வழிமறித்து கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *