அதிபரினை இடமாற்றம் செய்யக்கோரி போராட்டம்


ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய அதிபரினை இடமாற்றம் செய்யக்கோரி பாடசாலை மாணவர்களின் கல்வி ஒழுக்கம் மற்றும் ஏனைய இணைபாடவிதான செயற்பாடுகள் வீழ்ச்சியடைவதுடன், நிர்வாக சீர்கேடுகள் மற்றும் நிதி மோசடிகள் என பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும், பாடசாலையின் வளர்சியை சீர்குலைத்து பாடசாலை சொத்துக்களை மோசடி செய்யும் அதிபர் அவர்களை பாடசாலையிலிருந்து வெளியேற்றக்கோரி பழையமாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், பெற்றோர்கள் இணைந்து இன்று (11) காலை 8 மணியளவில் பாடசாலை நுழைவாயிலில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தார்கள்.

14 ஆசிரியர்களுக்கு அண்மையில் அவர்களுக்கான பதிலீடு இன்றி, தனிப்பட்ட பழிவாங்கும் நோக்கில், இடமாற்றத்திற்கு சிபாரிசு செய்தமை, இவரது பொறுப்பற்ற வார்த்தை பிரயோகங்கள்இ தனிப்பட்ட பழிவாங்கல்கள் காரணமாக இவர் பாடசாலையை பொறுப்பேற்கும்போது இருந்த ஆசிரியர்கள் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ( 83 ஆசிரியர்களிலிருந்து 63 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.)

இவரால் பாடசாலையின் ஏனைய ஊழியர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டு பாடசாலையின் அகச்சூழல் சீரின்றியும், பாதுகாப்பின்றியும் காணப்படுகின்றது. பாடசாலை சொத்துகளை பாதுகாப்பது மற்றும் அது தொடர்பான வெளிப்படை தன்மை இல்லாது செயற்படுகிறார்.

அதிபர் மீதான நிதிமோசடி விசாரணைகள் நடைபெற்று வருகின்றமை,

குறித்த விடயங்கள் தொடர்பாக அதிபருடன் பல தடவைகள் SDS/ OBA இணைந்து நடத்திய கலந்துரையாடல்களில் மேற்கொண்ட தீர்மானங்கள், ஆலோசனைகள் எதனையும் கருத்தில் கொள்ளாமல் தான்தோன்றிதனமான அதிபரின் செயற்பாடுகளால் மாணவர் கல்வி பாதிக்கப்டுகிறது.

குறிப்பாக உயர்தர மாணவர்களுக்கு சில பாடங்களுக்கு பொருத்தமான பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் இல்லை. பல பாட வேளைகளில் வகுப்புகள் நடைபெறுவதில்லை என்ற காரணங்களின் அடிப்படையிலையே குறித்த போராட்டம் இடம்பெற்றிருந்தது.

குறித்த அதிபர் தொடர்பான விடயங்கள் இரு செயலாளர்களாலும் வலயகல்விபணிப்பாளர், செயலாளர் கல்வி அமைச்சு, பிரதிக் கல்விப்பணிப்பாளர் – தேசிய பாடசாலை, கல்வி அமைச்சு என்பவற்றிற்கு நேரிலும், தொலைபேசியிலும், கடிதம் மூலமும் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனவும் பெற்றோர் அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர்கள் சங்கத்தினால் வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய குறித்த அதிபர் தொடர்பில் மாகாண கல்வி அமைச்சினால் விசாரணை குழு அமைக்கப்பட்டு ஆரம்ப புலனாய்வு விசாரணை தயாரிக்கப்பட்டு குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டும் குறித்த அதிபரை வலயத்துடன் இணைத்தே விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

அவ்வாறு ஒரு விசாரணையை மாகாண கல்வி அமைச்சு மேற்கொள்ளவில்லை. அதனால் இவ் விசாரணை கண்துடைப்பாகவே நாங்கள் கருதுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர்.

குறித்த போராட்ட இடத்திற்கு வருகைதந்த ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் நிஷாந்தன், தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளர் இந்திக்க ஆகியோரிடம் குறித்த கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டிருந்தது.

இதற்கான பிரதிகள் வடமாகாண பொதுச்சபை ஆணைக்குழு, ஆளுனர் செயலகம், ஆளுனர் குறைகேள் வலையமைப்பு, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், ஜனாதிபதி செயலகம் ஆகியோருக்கு குறித்த மகஜரினை தபால் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

குறித்த போராட்டத்தில் பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தினர், பெற்றோர்கள், பழையமாணவர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.


Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *