இனந்தெரியாதோரால் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் ஒரு வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், அடையாளம் தெரியாத வன்முறை குழுவொன்றால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை (10) இடம்பெற்ற இந்த சம்பவத்தில், மோட்டார் சைக்கிள் முற்றுமுழுதாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, அவர்கள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.