கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது


யாழ். வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் பெருந்தொகையான கேரள கஞ்சா போதைப்பொருள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி இன்றைய தினம் (8)காலை சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. குறித்த சுற்றிவளைப்பில் பெருந் தொகையான கேரளா கஞ்சா 8 உரப்பை பொதிகளில் கடலில் வீசப்பட்ட நிலையில் கடலில் இருந்து ஈரமான நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 50வயதான கட்டைக்காட்டினை சேர்ந்த சந்தேக நபரையும் கடல் படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சில மாதங்களுக்கு முன்பு ஒரு தொகை போதை பொருளுடன் கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனையின் பின் விடுதலை செய்யப்பட்டவர் என்று கடற்படை தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் மற்றும் படகு இயந்திரம் மற்றும் சந்தேக நபரையும் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் கடல் படையினர் ஒப்படைத்துள்ளனர்.


Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *