கீரிமலை நகுலேஸ்வரர் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாக விளங்கும் கீரிமலை நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று (13) காலை கொடியேற்ற விழாவுடன் ஆரம்பமானது.

அறுசீர்காழி சிவாச்சாரியார்கள் தலைமையில் காலை 7.00 மணிக்கு அபிஷேகம், பின்னர் 9.00 மணிக்கு வசந்த மண்டப பூசை, 10.00 மணிக்கு மகோற்சவ கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

மகோற்சவ நிறைவு விழாக்கள்:
25 பிப்ரவரி – பெரிய சப்பறத் திருவிழா
26 பிப்ரவரி – தேர்த்திருவிழா (காலை) | சிவராத்திரி சிறப்பு பூஜை (இரவு)
27 பிப்ரவரி – தீர்த்தோற்சவம்
இந்த மகோற்சவத்தின் முடிவுநாள் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறவுள்ளன.

