விவசாயிகளை விடுதலை செய்யகோரி போராட்டம்


குருந்தூர் மலையில் கைதுசெய்யப்பட்ட விவசாயிகளை விடுதலை செய்யகோரியும் உகந்தை மலை திட்டமிட்ட பௌத்தமயமாக்கலை தடுத்து நிறுத்த கோரியும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட பிரதான நுழைவாயில் முன்பாக இன்று (04) மதியம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், இந்த மண் எங்களின் சொந்த மண், மயிலத்தமனை மாதவமடு எங்கள் சொத்து, கலாசார அழிப்பை நிறுத்து, தழிழரின் நிலம் தமிழருக்கு, நிலம் எங்கள் சொத்த அதனை பறிக்க முனையாதே, விவசாயிகளை விடுதலை செய் ஆகிய கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போரட்டத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *