பாப்பரசின் மறைவு: யாழில் துக்க தினம் அனுஷ்டிப்பு
பரிசுத்த பாப்பரசரின் மறைவுக்கு யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் துக்கநாள் அனுஸ்டித்து வருகின்றனர் .
செம்பியன் பற்று வடக்கு வரலாற்று சிறப்புமிக்க புனித பிலிப்பு நேரியார் ஆலய பங்கு மக்கள் தமது திருத்தந்தையின் இழப்பின் கவலையினை வெளிப்படுத்தும் முகமாக ஆலய வாசலில் கருப்பு கொடி கட்டி மற்றும் ஆலய முன்றலில் பாப்பரசரின் இழப்புக்கான பதாகைகள் கட்டி தமது துர்கத்தினை வெளிப்படுத்தி உள்ளனர்.
இவ் இழப்பினை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் தாங்கள் இப்போது ‘ஆயன் இல்லா ஆடுகளை போல ‘உள்ளதாகவும் அடுத்த பாப்பரசரின் தெரிவினை மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறோம் எனவும் தமது கவலையினை தெரிவித்துள்ளனர்
