வைத்தியர் துஷ்பிரயோகம் : சந்தேக நபருக்கு வியக்கமறியல்


அநுராதபுரம் போதனா வைத்தியசாலை சம்பவத்தின் முக்கிய சந்தேக நபர் அடையாள அணிவகுப்பின் போது சம்பந்தப்பட்ட வைத்தியரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோக செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (28) அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இன்றைய நீதிமன்ற விசாரணையில் சந்தேக நபர் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டதுடன் துஷ்பிரயோகத்திற்குள்ளான வைத்தியரும் இன்று நீதிமன்றத்திற்கு வந்து சந்தேகநபரை அடையாளம் காட்டியுள்ளார்.

இதற்கமைய, கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபரை ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *