யாழில் புத்தர் சிலை மீட்பு

யாழ்ப்பாணம், வளலாய் பகுதியில் உள்ள கடற்கரையில் நேற்று (17) கைகள் சேதமடைந்த நிலையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது.
மியான்மார் நாட்டில் வாழ்கின்ற பௌத்தர்கள் அங்கு உயிரிழந்தவர்களின் நினைவாகக் கடலில் விடப்படும் மூங்கிலிலான தொப்பங்கள் கடந்த காலங்களில் வடமராட்சிப் பகுதிகளில் கரையொதுங்கின இதனால் கரையொதுங்கிய சிலை மியன்மார் நாட்டு சிலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
குறித்த சிலை தற்போது வளலாய் கடற்றொழிலாளர் சங்கக் கட்டடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
சிலை கரையொதுங்கியமை தொடர்பாக அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
