யாழில் கார் விபத்து


யாழ்ப்பாணம் – நாவற்குழி மாதா கோவிலடியில் நேற்றிரவு (17) காரொன்று விபத்துக்குள்ளானதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கனடாவிலிருந்து வந்த குடும்பத்தினர் பயணித்த காரொன்று கட்டுப்பாட்டையிழந்து வீதியோரத்தில் உள்ள மாதா கோவிலின் மதிலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இருப்பினும் இந்த விபத்தின்போது வாகனத்தில் பயணம் செய்தவர்களுக்கு எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லையென குறிப்பிட்டுள்ளனர்.

கனடாவிலிருந்து வந்த பெண் ஒருவர், அவரது கணவர் மற்றும் அவர்களின் 5 வயது குழந்தை ஆகியோர் பயணித்த காரே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளார்கள். நித்திரை கலக்கமே விபத்துக்கான காரணமென பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.


Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *