ரூ.27 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஐவர் கைது

யாழ்ப்பாணம் – நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கைகளில், 27 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய 121 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் 19 முதல் 51 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த கேரள கஞ்சாவை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு டிங்கி படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
