யாழில் 50 பேருக்கு டெங்கு காய்ச்சல்
யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக 50 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர் என யாழ் போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் சி. யமுனானந்தா தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடரபில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த வருடத்தில் இது வரையிலான கால பகுதியில் யாழ். போதனா வைத்தியசாலையில் மாத்திரம் டெங்கு காய்ச்சலுக்காக 50 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
டெங்கு நுளம்பு பரவலை கட்டுப்படுத்துவதன் ஊடாகவே டெங்கு காய்ச்சலில் இருந்து எம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.
எனவே நுளம்பு பரவும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றை அழிக்க வேண்டும் என்றார்.
