கட்டைக்காடு கடற்கரையில் கொக்கைன் போதைப்பொருள் மீட்பு


வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக வெற்றிலைக்கேணி கடற்படையினர் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றநிலையில் வெள்ளிக்கிழமை (07) யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கடற்கரையில் கொக்கைன் போதைப்பொருள் கடற்படையால் மீட்கப்பட்டுள்ளது.

வெற்றிலைக்கேணி கடற்படையினர் கட்டைக்காடு கடற்கரை பகுதியில் கண்காணிப்பை மேற்கொண்ட வேளை கடற்கரை பகுதியில் சிறு பொதியிலிருந்து 1 கிலோகிராம் கொக்கைன் போதை பொருளை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட போதைப்பொருளை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெற்றிலைக்கேணி கடற்படையினர், மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *