வேலையற்ற பட்டதாரிகளால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று (20) யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் நகரிலுள்ள உலகத் தமிழாராச்சி படுகொலை நினைவுத் தூபி முன்பாக இன்று காலையில்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு கோசங்களை எழுப்பிக் கொண்டு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு
பேரணியாகச் சென்றனர்.
